ஆரணி பேரூராட்சியில் `என் குப்பை என் பொறுப்பு’ கருத்தரங்கு விளக்க கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் என் குப்பை என் பொறுப்பு கருத்தரங்கு விளக்கக் கூட்டம் நடைபெற்றது.சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் `என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு கூட்டம் ஆரணி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் ஆரணி வர்த்தக சங்க பிரதிநிதிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் குப்பையை தரம் பிரித்து தர வேண்டியது அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் துணிப்பையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் கூறினர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கண்ணதாசன், ரகுமான்கான், பொன்னரசி, பிரபாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: