×

பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் புதிய கான்கிரீட் சாலை: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிய கான்கிரீட் சாலையை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ  மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள கான்கிரீட் சாலை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சாலை பழுதடைந்து சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை மாறியுள்ளது. மேலும் மழைக்காலம் வந்துவிட்டால் மழை தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். இந்த பகுதியில் வடிகால் கால்வாய் இல்லாததால் மழைநீர் குடியிருப்புக்குள் உள்ளே செல்லும் விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் நுழையும் அவலநிலை ஏற்பட்டிருந்தது. மழை காலங்களில் இப்பகுதி மக்கள் வெளியே செல்ல மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை மனு கொடுத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியாளர்கள் கண்டுகொண்டு இச்சாலையை உடனடியாக தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ12.74 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் செல்ல வடிகால் கால்வாய் அமைக்கும் பணி கடந்த மாதம் 20ம் தேதி அன்று தொடங்கப்பட்டு பணிகளை விரைவாக செய்து முடித்து வைத்தனர். அதன்படி  நேற்று இச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று ரிப்பன் வெட்டி சாலையை திறந்து வைத்தார். 12 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு இப்பகுதியில் சிமென்ட் சாலை மற்றும் வடிகால் கால்வாய் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்ததற்கு அப்பகுதி பெண்கள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுக்கு மாலை அணிவித்து மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் கோகிலா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஏ.சீனிவாசன், இளைஞரணி அமைப்பாளர் சங்கர், பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனசேகரன், ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜமுனா, கல்பனா வெங்கடேசன், தாராட்சி கார்த்திக், எல்.சீனிவாசன், விமல்ராஜ், ஹேமகுமார், மணி, ராஜலட்சுமி ரமேஷ் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : New Concrete Road ,Periyapalayam ,MGR ,DJ Govindarajan ,MLA , New Concrete Road in Periyapalayam MGR: DJ Govindarajan MLA Opens
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை...