×

மீண்டும் ஹாக்கி புரோ லீக் பெல்ஜியம் - இந்தியா இன்று பலப்பரீட்சை

பிரஸல்ஸ்: ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் மீண்டும் பெல்ஜியம் அணிகளுடன் மோதும் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.உலகின் முன்னணி அணிகள் பங்கேற்கும் எப்ஐஎச்  ஹாக்கி புரோ லீக் தொடரில், மகளிருக்கான தொடர் கடந்த ஆண்டு  அக்.13ம் தேதியும், ஆண்களுக்கான தொடர் அக்.16ம் தேதியும் தொடங்கின. ஆண்கள் பிரிவில்  இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன.இந்தியா இதுவரை  12 ஆட்டங்களில் 8 வெற்றி,  2 டிரா, 2 தோல்வியுடன் 27 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 10 ஆட்டங்களில் 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,  பெல்ஜியம் 12 ஆட்டங்களில் 27 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.மகளிர் பிரிவில்  இந்தியா, நெதர்லாந்து, அர்ஜென்டினா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பெல்ஜியம், சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளன.  இந்தியா இதுவரை 8 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 22 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.  அர்ஜென்டினா 14 ஆட்டங்களில் 38 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,  நெதர்லாந்து 12 ஆட்டங்களில் 26 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.

இந்திய   அணிகள் மோதும் ஆட்டங்கள் இனி பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் நடைபெற உள்ளன. மகளிர் அணி இன்னும் பெல்ஜியம், அர்ஜென்டினா, அமெரிக்காவுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாட உள்ளது. ஆண்கள் அணி பெல்ஜியம், நெதர்லாந்து அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் மோதுகிறது.முதல் ஆட்டங்கள் இன்று மாலை  பெல்ஜியத்தின் பிரஸல்சில் நடைபெற உள்ளன.    இந்திய நேரப்படி மாலை 5.30க்கு தொடங்கும் ஆட்டத்தில்  பெல்ஜியம் - இந்தியா மகளிர் அணிகளும்,  இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில்  பெல்ஜியம் - இந்தியா ஆண்கள் அணிகளும் மோதுகின்றன.ஜூலை 1ம் தேதி முதல் ஸ்பெயின், நெதர்லாந்தில் நடைபெற உள்ள மகளிர் உலக கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Hockey Pro League ,Belgium ,India , Hockey Pro League Belgium again - India today multi-examination
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!