இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் சிந்து, லக்‌ஷியா வெளியேற்றம்

ஜகார்தா: இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவி காலிறுதி ஆட்டங்களில் இந்திய நட்சத்திரங்கள் லக்‌ஷியா சென், பி.வி.சிந்து இருவரும் அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறினர்.ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் சீன தைபே வீரர் சோவ் டியன் சென்னுடன் நேற்று மோதிய லக்‌ஷியா (20 வயது) 16-21, 21-12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.  அடுத்து மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாகக் களமிறங்கிய பி.வி.சிந்து 12-21, 10-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானிடம் எதிர்ப்பின்றி சரணடைந்தார். இப்போட்டி 33 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சிந்துவுடன் இதுவரை 13 முறை மோதியுள்ள ரட்சனோக், 9-4 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. லக்‌ஷியா, சிந்து வெளியேறியதை தொடர்ந்து, இத்தொடரில் இந்தியாவின் பதக்க கனவு முழுவதுமாகக் கலைந்தது.

Related Stories: