×

குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரியில் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப வனங்களில் நாவல் பழம், பலா உள்ளிட்டவை அதிகளவில் காய்த்துள்ளது. அவற்றை தின்பதற்காக கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வருகின்றன.

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலாப்பழ மரங்கள் உள்ளன. இவற்றை உண்பதற்காக குட்டியுடன் கூடிய 6 யானைகள் கூட்டமாக கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு பகுதியில் முகாமிட்டுள்ளன. யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கவோ, துன்புறுத்தவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Gunnur Mountains , Coonoor Hill Trail, Wild Elephant Herd, Motorists, Forest Department Warning
× RELATED குன்னூர் மலைப்பாதையில் காட்டு...