×

விருதுநகரில் ஆக்கிரமிப்பால் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதி

விருதுநகர்: விருதுநகரில் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நகரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. 60 அடி சாலைகள் 20 அடிகளாக சுருங்கியுள்ளன. கடை வீதிகளில் கடைகளின் முன்பாக வாகனங்கள் நிறுத்தி எடுப்பதால் சாலைகள் போக்குவரத்திற்கு உகந்ததாகஇல்லை. நகரில் மெயின் பஜார், மதுரை ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பழைய பஸ் நிலையம், காசுக்கடை பஜார், ராமமூர்த்தி ரோடு, சாத்தூர் ரோடு, சிவகாசி ரோடு, டிடிகே ரோடு, புளுகானுரணி ரோடு, சர்ச் ரோடு என அனைத்து சாலைகளிலும் கடைகளின் முன்பகுதி சாலைகள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன.

மேலும் பழைய பஸ் நிலையம் எதிர்புறம் விக்னேஷ் காலனி ரோடு, அக்ராஹாரம் தெருக்களில் வாகனங்கள், கடையினர் முன்பகுதி சாலையை ஆக்கிரமித்து இருப்பதால் மக்கள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. பழைய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்வோர் வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்தாமல் விக்னேஷ் காலனி ரோட்டில் வங்கிகள், கடைகள் முன்பாக வாகனங்களை நிறுத்தி செல்வதால் பாதசாரிகள் நடமாட முடியவில்லை.

வாகன காப்பத்தில் வாகனங்களை நிறுத்தி செல்லவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Virudhunagar , Virudhunagar, occupation, public suffering
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...