×

செக்கானூரணி அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டுபிடிப்பு

திருமங்கலம்: செக்கானூரணி அருகே பண்டைகால புலிகுத்தி பட்டான் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி எஸ்.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அந்த கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் இருந்த கல்லை கண்டறிந்தார்.

இதுகுறித்து அருண்சந்திரன் கூறுகையில், ‘பண்டை காலங்களில் நம்மக்களின் முக்கிய தொழிலாக விவசாயமும், கால்நடைவளர்ப்பும் இருந்து வந்தது. இதற்கு என தனிக்குழு அமைத்து  கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்து வந்தனர். கால்நடைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்பு, கால்நடைகளை வேட்டையாட வரும் புலி, நரிகளும் அதிகளவில் மலை பகுதிகளில் காணப்படும்.

இந்த விலங்குகளிடமிருந்து கால்நடைகளை காக்கும் பொருட்டு இந்த குழுவை சேர்ந்த வீரர்கள் போராடி வந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வீரர்களோ, புலியோ இறப்பது உண்டு. இங்கு காணப்படும் சிற்பம் 4 அடி உயரமும் 2.5 அடி அகலத்துடன் பலகை கல்லில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் புலியை ஈட்டியால் குத்துவது போல் உள்ளது.  அருகே காணப்படும் பெண் அந்த வீரனின் மனைவியாக இருக்கலாம்.

வீரனின் காலடியில் வேட்டை நாய் காணப்படுகிறது. பாண்டியநாட்டில் மட்டும் புலிகுத்தி கல்லில் வேட்டை நாயின் உருவமும் சேர்த்து வடிப்பது வழக்கம். மற்ற பகுதிகளில் புலிகுத்திகல்லில் இவ்வித வேட்டைநாய் காணப்படுவது மிகவும் அபூர்வமாகும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல் மிகவும் சேதமடைந்துள்ளது’ என்றார்.

Tags : Ligutti Batton stone ,Checkanurani , Sekanurani, Pulikuthi Pattan stone, invention
× RELATED மதுரையில் அதிமுக தொழிற்சங்க தேர்தலில் இரு தரப்பினர் இடையே மோதல்