புதுமண தம்பதிகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி..!!

ஆந்திரா: நேற்று திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நயன்தாரா தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் பக்தர்களுக்கான சுபதம் நுழைவு வாயிலில் ஏழுமலையான் கோயிலுக்குள் சென்றனர்.

கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற பின்னர் ஏழுமலையானை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தரிசனம் செய்தனர். இவர்களின் திருமணம் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பிரபல திரை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், ஹாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: