×

மாப்பிள்ளை வேண்டாம்: தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் பாபு (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில், இரண்டாவதாக சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் திருமணம் செய்ய இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு நடைபெற்றது.

நேற்று காலை முகூர்த்தத்தில் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென மணப்பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறி திருமணத்தை நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார், அப்பெண்ணிடம் திருமணத்துக்கு சம்மதித்த பிறகு தானே திருமணம் ஏற்பாடுகள் நடந்தது, ஏன் இப்போது மறுக்கிறாய் என கேட்ட போது, எனது அண்ணனுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை.

நான் திருமணம் செய்து கொண்டால் எனது அண்ணன் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வருகிறார். அதனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து மணப்பெண் மற்றும் அவரது அண்ணன் ஆகியோரிடமும் திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அனைவரும் கெஞ்சிக் கூத்தாடியும் அவர்கள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திருமணத்துக்காக செலவு செய்த பணத்தை திருப்பி கொடுங்கள் என மாப்பிள்ளை வீட்டார் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tali , Do not groom, the woman who stopped the marriage,
× RELATED அரசு பள்ளியில் ஆண்டு விழா