மதுக்கரை மிலிட்டரி கேம்ப் அருகே ரேஷன் அரிசி கடத்திய டெம்போ கவிழ்ந்து விபத்து

மதுக்கரை : கோவையில் இருந்து ஒரு டெம்போ அதிக பாரம் ஏற்றிக்கொண்டு  மதுக்கரை பாலக்காடு ரோடு வழியாக நேற்று மதியம் சென்றது. அப்போது அந்த டெம்போ மதுக்கரை மிலிட்டரி கேம்ம்ப் அருகே கட்டுப்பாட்டை இழந்து திடீரென நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுஇத்தகவலறிந்து மதுக்கரை போலீசார் விரைந்து சம்பவயிடம் வந்து பார்த்தபோது அது ரேஷன் அரிசி கடத்தி வந்த டெம்போ என்று தெரிய வந்தது. உடனே டெம்ப்போவை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்து விட்டு டெம்போவை ஓட்டி வந்த பாலக்காட்டை சேர்ந்த ஜெபஸ்டியனிடம் விசாரித்தனர்.

 இதில் அவர் கோவை மாநகர பகுதியில் இருந்து வாங்கி 50 மூட்டை ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்து டெம்போ மற்றும் 50 டன் அரிசி ஆகியவைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: