தேவர்முக்குளத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி-திரளானோர் பார்வையிட்டனர்

கிருஷ்ணகிரி :  காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவர்முக்குளம் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து புகைப்படங்கள், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருததுவம், மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்குதல் என பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் பிற துறை அமைச்சர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிகள், கலெக்டர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி என 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. இதை 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Related Stories: