×

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு கொரோனா 2-ம் அலையே காரணம்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஓராண்டை கடந்துள்ள சூழலில், மேற்குவங்க தேர்தல் தோல்விக்கு கொரோனா 2-ம் அலையே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.  மேற்கு வங்க மாநிலத்துக்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 8 கட்டங்களாக மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளில் 213 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 77 இடங்களை பிடித்து தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தொடர்ந்து பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டேன் என முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார். அதில், தேர்தல் பிரச்சாரத்தை கொரோனா 2-ம் அலை பாதிக்காமல் இருந்திருந்தால் மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும் என்று தெரிவித்தார். மேற்குவங்கத்தில் அடுத்தமுறை வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றி கொல்கத்தாவில் பாஜக வெற்றி பேரணி நடத்தும் என்றும் குறிப்பிட்டார்.    


Tags : Corona 2nd wave ,West ,Bengal ,BJP ,JP Natta , West Bengal, Legislature, Defeat, Corona, BJP, J.P. Natta
× RELATED மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு...