நாட்டின் பாதுகாப்பே அனைத்துக்கும் மையப்புள்ளி; 2047ல் உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும்.! ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: மக்களின் உழைப்பால் உருவானது தான் நம்நாடு; அரசுகள் அதனை வடிமைக்க மட்டுமே செய்தன என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். நாட்டில் ஒவ்வொருபகுதிலும் ஒவ்வொரு பிரச்சனை நிலவி வருகிறது; நாட்டின் பாதுகாப்பே அனைத்துக்கும் மையப்புள்ளி என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- இந்திய நாடு மக்களால் உருவாக்கப்பட்டது.

அரசுகளால் உருவாக்கப்படவில்லை. மக்கள் உழைப்பால் உருவானது தான் நம்நாடு. அரசுகள் அதனை வடிவமக்க மட்டுமே செய்தன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் தற்போது பயணித்து வருகிறோம். 2047 உலகிலேயே பலம் வாய்ந்த நாடாக இந்தியா மாறும், அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: