×

ரஷ்யா- உக்ரைன் போர் தீவிரமாகுமா?: நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க உக்ரைன் அதிபருக்கு அழைப்பு..!!

ஸ்பெயின்: இந்த மாத இறுதியில் ஸ்பெயினில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு மாநாட்டிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதனால் ரஷ்யாவுக்கும் - உக்ரைனுக்கும் இடையேயான மோதல் மேலும் உக்கிரமடையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அந்த கூட்டமைப்பின் துணை பொதுச்செயலாளர் விர்சயா ஜியானோ கூறியுள்ளார். இதனிடையே உக்ரைன் அண்டை நாடுகளில் ஒன்றான போலந்து அருகே திடீரென நேட்டோ நாடுகளின் கூட்டு படைகள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. ரஷ்யாவுக்கு மிரட்டல் விடும் தோணியில் போர் ஒத்திகை நடைபெற்று வருகிறது.

உலகளாவிய அளவில் பெரும் உணவுப்பொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் முயற்சியில் தங்கள் நாட்டின் விவசாய இலக்குகளை ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி அழித்து வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த வாரத்தில் உக்ரைனில் உள்ள மிகப்பெரிய விவசாய பொருட்கள் முனையங்கள் மீது ரஷ்யா குண்டுகளை வீசி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையே உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், அவற்றை கள்ளச்சந்தையில் உக்ரைன் விற்பனை செய்வதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது அமெரிக்கா உடனான நேரடி பகைக்கு வலு சேர்ப்பதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.


Tags : Russia ,Ukraine ,president ,NATO , Russia-Ukraine war, NATO summit, President of Ukraine
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...