திருப்போரூர் ஒன்றியத்தில் 53 அடி உயர பாமக கொடி கம்பம்: அன்புமணி கொடியேற்றினார்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் கொட்டமேடு கிராமம் உள்ளது.  இங்கு, பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்பு மணிக்கு 53 வயது ஆவதை குறிக்கும் வகையில் 53 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு, முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க துணைத்தலைவருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் என்.எஸ்.ஏகாம்பரம், கணேசமூர்த்தி, பி.வி.கே.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டு 53 அடி உயர கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். இதில், திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் தனுசு, கங்காதரன், முருகேசன், இராஜா, ஜானகிராமன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, காயார் ஏழுமலை, மோகன், பாலாஜி, பூபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Related Stories: