×

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி நிறைவு விழா கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினர். இதற்கு, முன்னதாக. வாலாஜாபாத் வட்டத்தில் 1431 வருவாய் தீர்வாயக் கூட்டம் கடந்த  1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்தது. இந்த ஜமாபந்தியில்,  மொத்தம் 1,054 மனுக்கள் பெறப்பட்டன.  இதில், 173 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 881 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிறைவுநாளில், 31 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 17 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, 54 பயனாளிகளுக்கு முழு புலம் பட்டா மாற்றம், 18 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, பழங்குடியின மக்களுக்கு மூலிகை மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் மற்றும் நர்சரி அமைக்க உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக 5 பயனாளிகளுக்கு இஸ்திரிபெட்டி, 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 12 பயனாளிகளுக்கு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க சார்பில் உதவித்தொகை என மொத்தம் 173 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிதொகைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன், மண்டல துணை வட்டாட்சியர் கோமளா, வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடியின் செல்வராஜ், திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி, துணை தலைவர் சுரேஷ்குமார் உப்பட அரசு அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags : Jamabandi ,Wallajabad , Jamabandhi Closing Ceremony in Walajabad Welfare Assistance to Villagers
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு