×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாமண்டூரில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் தலைமை பொறியாளரிடம் மனு

திருத்தணி: திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் காஞ்சிபுரம் கூடுதல் தலைமை பொறியாளர் சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது. திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரி ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். உதவி கோட்ட செயற்பொறியாளர்கள் திருத்தணி நகரம் எம். ராஜேந்திரன், ஊரகம் கோட்டீஸ்வரி, ஆர்கே பேட்டை முருகபூபதி, பள்ளிப்பட்டு ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த கூட்டத்தில், திருத்தணி அடுத்த நாபலூர் ஊராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், மின்வாரிய அதிகாரிகளிடம், மாமண்டூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கிராமங்களுக்கு குறைந்த மின் அழுத்தம் வருகின்றன. இதனால், லட்சுமபுரம், நாபலூர், மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறைந்த மின் அழுத்தம் மின்சார வருகிறது. இதனால், தங்களுடைய விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், மாமண்டூர் துணை மின் நிலையத்தில் இருந்து குன்னத்தூர் வரை உயர் மின் அழுத்த கம்பிகளை மாற்றி தரவும் மேலும் பழுதடைந்த இந்த மின் கம்பங்களை மாற்றியும் 33 கிலோ வாட் துணை மின் நிலையத்தை 110 கிலோ வாட் துணை மின் நிலையமாக மாற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், திருத்தணி அடுத்த அகூர் கிராமத்திற்கும் பாப்பிரெட்டிப்பட்டி இடைப்பட்ட சாலையில் விவசாய நிலத்திலும், சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அந்த பகுதிகளில் மின் கம்பங்களை நட்டு மின் கம்பிகளை உயர்த்தி தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த நெடுங்கல் கிராமத்தில் பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றி தரவும் முருகன் என்ற விவசாயி தலைமை பொறியாரிடம் மனு அளித்தார் அத்தி மஞ்சரி பேட்டையில் மகாதேவன் என்ற விவசாயி தனக்கு மின்னிணைப்பு வழங்கக்கோரி மனு அளித்தார். மாமண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சா, சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். இது போல் பல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், உதவி பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், புஷ்பராஜ் கேசவன் இஸ்மாயில் சுரேஷ் ஸ்டாலின் ஜோசப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரரிடம் உறுதியளித்தனர்.



Tags : Mamandur ,Chief Engineer , 110 KW substation to be set up at Mamandur: Farmers petition Chief Engineer
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில்...