×

உத்திரமேரூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி கூட்டம் நடந்தது. உத்திரமேரூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலக கூட்ட அரங்கில் லாபகரமான முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி கூட்டம் நடந்தது. காஞ்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி, உத்திரமேரூர் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராயப்பன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் தேவகி கலந்து கொண்டார்.  நாட்டு கோழி இனங்கள் மற்றும் இனப்பெருக்க முறைகள், மற்றும் பராமரித்து வளர்க்கும் முறை, கொட்டகை அமைக்கும் முறை, தீவனம் தயாரித்தல், குடிநீர் மேளாண்மை, நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் அதனை தடுக்கும் வழிமுறைகள், மூலிகை மருத்துவ வழிமுறைகள், கோழி குஞ்சுகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் அரசின் திட்டங்கள் பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Tags : Uttiramerur , Poultry rearing training in Uttiramerur
× RELATED உத்திரமேரூரில் ஒரே நாளில் 2,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி