×

இனி வெற்றிதான் இலக்கு: சிரஞ்சீவி திட்டவட்டம்

ஐதராபாத்: அடுத்தடுத்து 2 படங்கள் தோல்வி அடைந்ததால், இனி வெற்றிதான் இலக்கு என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.சிரஞ்சீவி நடிப்பில் பான் இந்தியா படமாக உருவானது, சைரா நரசிம்மா ரெட்டி. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்தனர். ஆனால், படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சமீபத்தில் வெளியான படம், ஆச்சார்யா. இதில் சிரஞ்சீவியுடன் அவரது மகனும், நடிகருமான ராம் சரண் நடித்தார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்தார். இந்தப் படமும் ஓடவில்லை. இந்நிலையில், தற்போது காட்ஃபாதர், போலா சங்கர் ஆகிய படங்களில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: இப்போதும் இளமையாக நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால், இரண்டு படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் ஒரு தொய்வு ஏற்பட்டு இருப்பது நிஜம்தான். ஆனால், அதற்காக நான் சோர்ந்துவிடவில்லை. இனி வெற்றிதான் இலக்கு. அந்தவகையில் காட்ஃபாதர், போலா சங்கர் படங்களை பெரிதும் எதிர்பார்க்கிறேன். இந்தப் படங்கள் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.



Tags : Chiranjeevi , Now the goal is success: Chiranjeevi plan
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!