×

ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் மும்பை, ம.பி.

ஆலூர்: உத்ர பிரதேசத்தை தொடர்ந்து ரஞ்சிக் கோப்பை அரையிறுதியில் விளையாட  மும்பை, மத்திய பிரதேசம் அணிகள்  தகுதிப் பெற்றுள்ளன. பெங்களூர் மற்றும் ஆலூரில் ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 6ம் தேதி தொடங்கியது.உத்ரபிரதேசம் 3வது நாளே  கர்நாடகாவை வீழ்த்தி முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.பஞ்சாப்-மத்தியபிரதேசம் இடையிலான மற்றொரு காலிறுதி ஆலூரில் நடந்தது.  முதல் இன்னிங்சில் பஞ்சாப்  219ரன்னும், ம.பி 397ரன்னும் எடுத்தன. ஆட்டத்தின் 4வது நாளான நேற்று  2வது இன்னிங்சை தொடர்ந்த ம.பி   203ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியின் அன்மோல் 34, சித்தார்த் 31, மயாங்க் 33, அன்மோல்பிரீத் 31 ரன் எடுத்தனர். கார்த்திகேயா 6, சரண்ஷ்  4 விக்கெட் அள்ளினர்.அதனால்  26ரன் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களம் கண்ட  ம.பி விக்கெட் இழப்பின்றி  இலக்கை எட்டியது. அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ம.பி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேபோல் மும்பை- உத்ரகண்ட் இடையிலான 2வது காலிறுதி ஆட்டமும்  ஆலூரில் நடந்தது. முதல் இன்னிங்சில்  மும்பை 647ரன்னுக்கு டிக்ளேர் செய்திருந்தது. உத்ரகண்ட் 114ரன்னில் ஆட்டமிழந்திருந்தது. அதனையடுத்து   2வது இன்னிங்சில் 3விக்கெட் இழப்புக்கு 261ரன் எடுத்திருந்த மும்பை  நேற்று காலை ஆட்டம் தொடங்கியதும்  டிக்ளேர் செய்தது. அதனால் 795ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன்  உத்ரகண்ட் 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 69ரன்னில் சுருண்டது.  அதனால் மும்பை 725ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றதுடன் 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.உ.பி,ம.பி, மும்பை அணிகளை தொடர்ந்து 4வது அணியாக பெங்கால்     அரையிறுதிக்கு தகுதிப் பெறுவது உறுதியாகி விட்டது. கடைசி நாளான இன்று  பெங்கால்-ஜார்கண்ட் இடையிலான ஆட்டம் ஒரு வேளை  டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில்  அதிக ரன் குவித்திருப்பதால் பெங்கால் அரையிறுதிக்கு முன்னேறும்.

வீராசாமி வெளியே வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்கதேசம்  2 டெஸ்ட்,  தலா 3 டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்  ஜூன் 16ம் தேதி நார்த் சவுண்டில் தொடங்குகிறது. அதற்கான  வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கிரெய்க் பிரத்வைட் தலைமையிலான அணியில் ஜோஷ்வா,  அல்சாரி, கேல் மேயர்ஸ்,  ஜெர்மைன், நெக்ரூமா ஆகியோருடன் நிறைய புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். அனுபவ வீரர்களான ஜேசன் ஹோல்டர்கள், வீராசாமி பெருமாள்,கெமர் ரோச் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.பாக் வீரர்  ‘பாஸ்’பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹசனைன்(22). ஆஸியில் ஜனவரி மாதம் நடந்த  பிக் பாஷ் லீக் டி20 தொடரில்  சிட்னி தண்டர் அணிக்காக விளையாடினார். அப்போது  முகமது தவறான முறையில் பந்து வீசுவதாக புகார் எழுந்தது. சர்வதேச அளவில்  நடந்த தரபரிசோதனையில் அவர் மீது தவறில்லை என்பது நேற்று நிரூபணமாகி உள்ளது.‘பிக் பாஷ்’ பாண்டிங் ஆஸி அணியின் முன்னாள் கேப்டன்  ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். இப்போது பிக் பாஷ் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘உத்திகள் வகுப்பதற்கான தலைவர்’ பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபதவியில் அவர் 3 ஆண்டுகள் நீடிப்பார். கூடவே வீரர்கள், பயிற்சியாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளையும் கவனிப்பார்

ஸ்டார்க்’கு ஜே இலங்கை சென்றுள்ள ஆஸி அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. எஞ்சிய ஒரு டி20  நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில்  ஆஸி வேகம் மிட்சல் ஸ்டார்க்  காயம் காரணமாக நாளை நடைபெறும் கடைசி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் விரலில் ஏற்பட்ட  காயம் காரணமாக 2வது ஆட்டத்தில் அவருக்கு பதில் ஜே ரிச்சர்ட்சன் விளையாடினார்.   அவரே ஸ்டார்க்கு பதில் நாளையும்  விளையாடுவார்.  ஆனால் ஒருநாள் தொடருக்கு ஸ்டார்க்குக்கு பதில்  மெக் ஆண்ட்ரூ வரவழைக்கப் படுகிறார். ஜே பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட உள்ளதால் இந்த மாற்றம். அதே நேரத்தில் ஸ்டார்க் தொடர்ந்து அணியுடன்  தங்கியிருப்பார், காயம் குணமடைந்தால் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார். தடுப்பால்... கடுப்புஆசிய கோப்பை போட்டிக்கான 3வது கட்ட தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா முதல்  ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை வென்றது. லீக் சுற்றில் வெற்றியுடன் அதிக கோல் அடிப்பது அவசியம். ஏனென்றால் பல நேரங்களில் கோல் வித்தியாசம்தான் அடுத்தச் சுற்று வாய்ப்பை உறுதி செய்கின்றன. ஆனால்  சுமாரான அணியான கம்போடியா உடன் விளையாடிய இந்தியா நிறைய கோல் அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மாறாக இந்தியா ஆட்டம் முழுவதும் தடுப்பாட்டம் விளையாடியதால்  ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். அடித்து உடைத்த சாதனை பெங்களூரில் நடக்கும் ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டம் ஒன்றில்  ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 773ரன் குவித்தது. அந்த அணி சார்பில் களம் கண்ட 9 பேரும் 50ரன்னுக்கு மேல் விளாசி சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு 1893ம் ஆண்டு ஆஸ்திரலியா அணியில்,  இதுப்போன்ற முதல் தர ஆட்டத்தில்  களம் கண்ட 8 வீரர்களும் அரைசதம் விளாசி உள்ளனர். அந்த 129 ஆண்டு சாதனையை பெங்கால் வீரர்கள் முறியடித்துள்ளனர். அந்த அணியின் வீரர்கள் அபிஷேக் ராம் 61, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 65,  சுதிப் காரமி 186, அனுஸ்தூப் மஜூம்தர் 117, மனோஜ் திவாரி 73,  அபிஷேக் போரெல் 68, ஷபாஸ் அகமது 78, சயான் மண்டல் 53*, ஆகாஷ் தீப் 53* ரன் விளாசினர்.
‘பாரினிலும்’ பந்தாடுவோம்

எப்ஐஎச் புரோ லீக் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிச் சுற்று  நாளை பிரஸ்ஸல்சில் தொடங்குகிறது. அதற்காக பெல்ஜியம் சென்றுள்ள சவீதா தலைமையிலான இந்தியா அணி அங்கு தீவிர பயற்சியில் ஈடுபட்டுள்ளது. பயிற்சிக்கு இடையில் சவீதா, ‘நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள செய்த தவறுகளை சரி செய்து உள்ளோம். பெல்ஜியம், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டங்களில் கிடைத்த வெற்றி எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதனை அந்நிய மண்ணிலும் சாதித்துக் காட்டுவோம்’ என்று கூறியுள்ளார்.‘எல்போ’ வலியால் ‘எஸ்கேப்’டென்னிஸ் உலகில் வேகமாக முன்னேறி வரும் இளம் புயல்  ஸ்பெயின் வீரர் கார்லோஸ்  அல்கரஸ்(19வயது, 7வது ரேங்க்) காலிறுதி வரை முன்னேறி அசத்தினார். முன்னதாக பார்சிலோனா, மாட்ரிட் ஓபன் பட்டங்களையும் வென்றார். அதனால்  இம்மாத இறுதியில் தொடங்க  உள்ள விம்பிள்டன்னிலும் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் பயிற்சியின் போது முழங்கையில்(எல்போ) ஏற்பட்ட காயம் காரணமாக  விம்பிள்டன் ஓபனில்  இருந்து கார்லோஸ் விலகி உள்ளார்.

Tags : Mumbai ,M.P. ,Ranji Trophy , Mumbai, M.P. in Ranji Trophy semi-finals
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...