×

திருவள்ளுவர் பல்கலை. முறைகேடுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் முறைகேடு குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியை  நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூர் அடுத்த சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் 128 கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் பக்கிரிசாமி அசோகன் என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த 2015ம் ஆண்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து, 6 பேரை பல்கலைக் கழக ஊழியர்களாகப் பணியமர்த்தியது கூறப்படுகிறது. மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக தேர்வு போன்ற ரகசிய பணிகளை தனியாருக்கு விடப்படுவதாகவும், பல்கலைக்கழக பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருவள்ளுவர் பல்கலைகழக அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து, ஆட்சிமன்றக் குழு முன்னாள் உறுப்பினர் இளங்கோவன் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் திருவள்ளுவர் பல்கலைகழக முறைகேடு குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி மலர்விழியை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளுவர் பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு ஆகியோர் மீது எழுந்த ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்னை அறிவியல் நகர துணை தலைவர் மலர்விழி ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.நிதிமுறைகேடு, தேர்வு முறைகேடு, டெண்டர் முறைகேடு, தற்காலிக பேராசியர்கள், பணியாளர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு 3 மாதத்தில் அறிக்கை சமர்பிக்க ஆணையிடப்படுகிறது. இந்த விசாரணை காலத்தில் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திருவள்ளுவர் பல்கலைகழக பதிவாளர் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Thiruvalluvar University ,IAS ,Tamil Nadu Government , Thiruvalluvar University. Appointment of IAS officer Malarvizhi to investigate irregularities: Government of Tamil Nadu order
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...