சென்னையில் 12வது காவல் மாவட்டமாக கொளத்தூர் காவல் மாவட்டம் உதயம்: குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் 12வது காவல் மாவட்டமாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் 11 காவல் மாவட்டங்கள் செயல்பட்டு வந்த நிலையில், 12வது காவல் மாவட்டமாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.எஸ்.பி.யாக இருந்த ராஜாராம் கொளத்தூர் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னையில் 12 காவல் மாவட்டங்கள் இருந்தன. தற்போது ஆவடி புதிய கமிஷனர் அலுவலகம் திறக்கப்பட்டபோது அம்பத்தூர் காவல் மாவட்டம் ஆவடியில் சேர்ந்தது. இதனால் சென்னையில் 11 காவல் மாவட்டங்கள் இருந்தன. இந்நிலையில் நேற்று புதிதாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு மீண்டும் சென்னையில் 12 காவல் மாவட்டங்கள் செயல்பட உள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவல் மாவட்டத்திற்கு அண்ணாநகர் காவல் மாவட்டத்திலிருந்து வில்லிவாக்கம். ராஜமங்கலம், கொளத்தூர். உள்ளிட்ட காவல் நிலையங்களையும், இதேபோன்று குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திலிருந்து பெரவள்ளூர், திருவிக நகர், செம்பியம் உள்ளிட்ட காவல் நிலையங்களையும், புழல், மாதவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களையும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. புதிய காவல் மாவட்டம் உருவாக்குவதன் மூலம் காவல் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் எண்ணிக்கை குறைந்து குறிப்பிட்ட சில காவல் நிலையங்களுக்கு ஒரு துணை கமிஷனர் நிர்ணயிக்கப்பட்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைய இது வழிவகுக்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில காவல் நிலையங்களுக்கு ஒரு துணை கமிஷனர் நிர்ணயிக்கப்பட்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைய இது வழிவகுக்கும்.

Related Stories: