×

இஸ்லாமியர்கள் நலன் எனக்கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு வாபஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இஸ்லாமியர்களின் நலனுக்காக எனக் கூறி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவதற்காகவும், பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி பணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற நாட்களிலும் பணம் வசூல் செய்யப்பட்டாலும், ரமலான் பண்டிகையின்போது அதிகளவில் நடைபெறுகிறது. அவ்வாறு வசூலிக்கப்படும் பணம் சட்ட விரோத காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனால், அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்கக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது ஆவடி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டுபவர்களை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர்களை சேர்த்து புதிய மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் எனவே இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள் மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags : High Court ,Islamists , High Court withdraws case seeking action against money launderers in the interest of Islamists
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...