×

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை சமூக சேவகர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-2023ம் நிதியாண்டிற்கான சுதந்திர தின விழாவின்போது, சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்து தமிழ்-2 மற்றும் ஆங்கிலத்தில்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.வருகின்ற 30ம் தேதிக்குள் கருத்துக்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Can apply for the award for best service social workers for the advancement of women: Government announcement
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...