நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார்: விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல்ஹாசன் உறுதி..!!

சென்னை: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு எப்போதும் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணமான நண்பர்கள், தோழர்களை கடந்த ஒரு வாரமாக நேரில் சந்தித்து நன்றி கூறி வருவதாக தெரிவித்தார்.

சந்தோஷத்தை கடந்த இந்த வெற்றி பயத்தை கொடுத்திருப்பதாகவும், இன்னும் வெற்றிக்காக உழைப்போம் என்றும் கமல்ஹாசன் கூறினார். நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், ரஜினியும், லோகேஷ் கனகராஜும் முடிவு செய்தால் இணைந்து நடிப்பதற்கு தயார் என்றார் அவர். விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் நடிகர் சூர்யா கால்ஹீட் கொடுத்ததும் தொடங்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார். நடிகர் விஜயை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: