விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமீன்; டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: விசா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூபாய் 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டு, தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பால் விசாரித்தார். கடந்த 2ம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஏற்கெனவே ஐஎன்எக்ஸ், ஏர்டெல் மேக்ஸ் வழக்குகளில் சிபிஐ அமலாக்கத்துறைக்கு பாஸ்கர ராமன் ஒத்துழைத்து வருகிறார்.

எனவே பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. சிபிஐ தரப்பில், விசா முறைகேடு குற்றச்சாட்டில் பாஸ்கர ராமனுக்கு அனைத்து தரப்பினரிடம் முக்கிய நபராக செயல்பட்டு உள்ளார். விசாவிற்காக ஆடிட்டரை அணுகவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை எழிப்பிய சிபிஐ, மேலும் எவ்வித சரிபார்ப்பும் இல்லாமல் 263 வெளிநாட்டு நபருக்கு முறைகேடாக விசா தயாரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், ரூ.2 லட்சம் பிணை தொகை செலுத்தவும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வேண்டும் என அறிவித்தார். 

Related Stories: