×

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் 100% கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. போலி நகைகளை வைத்து முறைகேடாக நகைக்கடன் பெற்றிருப்பதும் இதன் மூலம் அடையாளம் காணப்பட்டது. ஆய்வு முடிந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு சுமார் 5,296 கோடி ரூபாய் அளவிற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு வங்கிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 97 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற 14,40,000 பயனாளர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், 100 சதவீதம் தெரிவித்துள்ளபடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ரூ.5,296 கோடி மதிப்பிலான நகைக்கடன் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளர்களிடம் சான்றிதழ் மற்றும் நகைகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.


Tags : Minister ,I. Periyasamy , Co-operative Bank, Jewelery, Minister I. Periyasamy
× RELATED சிஏஏ எதிர்த்து போராட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து