×

கொள்ளிடம் அருகே 2 வயதில் திருக்குறள், தமிழ் உயிர் எழுத்துக்களை கூறி சாதனை: உலக சாதனை படைத்த ஆண் குழந்தை

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் அசாமில் இந்திய விமானபடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யாமினி. இவர்களுக்கு அகரமுதல்வன் என்ற 2வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை திருக்குறள்,தமிழ் உயிர் எழுத்துக்கள்,தமிழ்,ஆங்கில மாதங்களின் பெயர்கள், நம்பர்கள், இந்தியில் 1 முதல் 10 வரையிலான நம்பர்கள் ஆகியவற்றை கூறி அசத்தி வருகிறார்.

திருக்குறள் 3, தமிழ் உயிர் எழுத்துகள், வாரங்கள் மற்றும் மாதங்கள், எண்கள் (தமிழ், ஆங்கிலம், இந்தி), தமிழில் எண்கள் 1 முதல் 100 வரை தேசிய தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள், சமையல் பொருட்கள்,உபகரணங்கள், படிப்பு உபரணங்கள், ஃபிளாஷ் கார்டுஸ், ரைம்ஸ் , பறவைகள், வாகனங்கள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், உடல் உறுப்புகள் என்று கிட்டத்தட்ட 1000 எண்ணிக்கை வரை கூறி, கலாம் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டு இரண்டு வயதுக்குள் இடம் பெற்று விட்டார்.

Tags : Tirukpura ,Kodadam , At the age of 2 near Kollidam, Thirukkural achieved the feat of reciting the Tamil alphabet: the world record-breaking boy
× RELATED கொள்ளிடம் அருகே 2 வயதில் திருக்குறள்,...