×

கந்தர்வகோட்டை பகுதியில் ஒற்றை நெல் பயிர் நடவு பணி தீவிரம்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விவசாய பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடலை விதைப்பு, கடலைக்கு களை பறிப்பு, சோளம் பயிர் பராமரிப்பு கரும்பு தோட்ட வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.இப்போழுது நடவு என்பது நவீன முறையில் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நாற்றங்காலில் நெல் பாவி 30 தினங்கள் முதல் 40 தினங்களில் நாற்றங்காலில் பாவியிருக்கும் பயிர்களை பறித்து வயல்வெளிகளில் நடவு செய்து வந்தார்கள். இதில் பெண்கள் நடவு செய்யும்போது நடவு பாடல் பாடி நாற்று நடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

தற்சமயம் நவீன முறையில் இயந்திரங்களைக் கொண்டு ஒற்றைப் பயிர் நடவு, பாய் நடவு என்றும் மீடியா நடவு என்ற பெயரில் நெல் பயிர் நடவு செய்து வருகிறார்கள். பாய்நாற்று தயார் செய்யும் பண்ணைகளில் விவசாயிகள் என்ன ரகம் நெல் நாற்று தேவை என்பதை முன்கூட்டியே கூறி முன் தொகை கொடுத்துவிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு நெல் பயிர் முதல் நடவு வரை 6500 ரூபாய் என்ற விலையில் நாற்று பண்ணை உரிமையாளர் வந்து இயத்திரங்களை கொண்டு நாற்று நட்டு கொடுத்துவிடுகிறார்கள். இதை பற்றி விவசாயிகளிடம் விசாரிக்கும்போது அவர்கள் நாற்று பாவுவது முதல் நடவு வரை ஆகும் செலவை ஒப்பிடும்போது இயந்திரம் கொண்டு பாய் முறையில் ஒற்றைப் பயிர் நடவு ஏற்றதாக உள்ளது என கூறுகிறார்கள்.

Tags : Kandarwakottai , Intensity of single paddy planting in Kandarwakottai area
× RELATED பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று...