சட்ட மன்ற தோர்தலில் 13 முறை வெற்றி பெற்ற வரலாறு கலைஞருக்கு மட்டுமே உண்டு: எம்எல்ஏ சுந்தர் பேச்சு

செய்யூர்: செய்யூர் அருகே நடந்த கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில், ‘13 முறை திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்ற பெற்ற வரலாறு இந்தியாவிலேயே ஒரே தலைவர் கலைஞர்தான்’ என எம்எல்ஏ சுந்தர் பேசினார்.செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் பவுஞ்சூரில் நடந்தது. இதில், லத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கிளை கழக செயலாளர் லோகநாதன் வரவேற்றார். கட்சி நிர்வாகிகள்  வெங்கட்ராமன்,  வெங்கடேசன்,  ராஜ்குமார்,  சுந்தரவடிவழகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ  மற்றும் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் பேசுகையில்,  ‘13 முறை திமுகவின் வேட்பாளராக, உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற, ஒரே தலைவர் கலைஞர்.

ஒரே கட்சியில், ஒரே சின்னத்தில் நின்று வென்ற வரலாறு இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் கிடையாது. அந்தப் பெருமைக்குரியவர் கலைஞர். தொண்டனிடம், தூக்கத்தில் எழுப்பி கலைஞர் என்று சொன்னாலே வாழ்க என்று தான் அனைவரின் நெஞ்சிலிருந்து வரும், உயிரோடு கலந்த அந்த உணர்வு தான் கலைஞர்’ என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடு ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அம்பிகா ஏழுமலை, முன்னாள் ஒன்றிய துணை தலைவர் வீரராகவன், ஒன்றிய திமுக நிர்வாகிகள் மோகன்ராஜ்,  ஏமநாதன், மகாலட்சுமி கதிரேசன், காந்த், ராஜேந்திரன், ராமமூர்த்தி, வழக்கறிஞர் அணி நிர்வாகி சுரேஷ்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை கழக செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories: