பூந்தமல்லி, நசரத்பேட்டை காவல் நிலையங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி ஆய்வு

பூந்தமல்லி: ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த வரவேற்பாளர், கைதிகள் அறை, போலீசாரின் வருகைப் பதிவேடு, குற்ற வழக்குகள் குறித்த ஆவணங்கள், காவல் நிலையத்தின் பராமரிப்பு, வசதிகள் குறித்து ஆய்வுசெய்தார். அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களிடம், எங்கிருந்து இங்கு பணிக்கு வருகிறார்கள், எவ்வளவு தூரத்திலிருந்து வருகிறார்கள், கணவரின் பணி, குடும்ப சூழ்நிலை, குறைகள் உள்ளிட்டவை குறித்து அவர் கேட்டறிந்தார்.மேலும் காவல் நிலையத்துக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது குறித்தும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அவர் அறிவுறுத்தினார். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர் நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் ஆய்வு செய்தார்.

Related Stories: