×

மாஜி மனைவி ரூ116 கோடி தரணும் இந்தியன் ஓட்டலில் பார்ட்டி வைத்த ஜானி டெப்

லண்டன்: மாஜி மனைவி 116 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்தியன் ஓட்டலில் பார்ட்டி வைத்திருக்கிறார், ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஹாலிவுட் படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், ஜானி டெப். இவர் தனது 2வது மனைவி அம்பர் ஹியர்டை விவாகரத்து செய்தார். இந்நிலையில், ஜானி டெப் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார் அம்பர். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அம்பர் செயல்படுவதாகவும், இதற்காக அவர் தனக்கு ரூ100 கோடிக்கு மேல் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அம்பரை ஜானி டெப் சித்ரவதை செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், அவரது புகழுக்கு களங்கம் விளைவித்த அம்பர், அவருக்கு ரூ116 கோடி நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஜானி டெப்புக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. சமூக வலைத்தளங்களில் இந்த தீர்ப்பை வரவேற்று பல்வேறு கருத்துகள் வைரலானது.

இந்நிலையில், தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில், லண்டனில் படப்பிடிப்பில் இருந்த ஜானி டெப், பார்ட்டி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி லண்டனில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரென்ட்டில் அவர் பார்ட்டி கொடுத்திருக்கிறார். இதில் அவரது நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். பார்ட்டியில் பல்வேறு வகையான சிக்கன் உணவுகள், இறால் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த பார்ட்டிக்காக ரூ48 லட்சத்தை ஜானி டெப் செலவிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.



Tags : Johnny Depp , Johnny Depp, ex-wife, partying at an Indian hotel for Rs 116 crore
× RELATED மாஜி மனைவி ரூ116 கோடி தரணும் இந்தியன் ஓட்டலில் பார்ட்டி வைத்த ஜானி டெப்