×

நான் சாய் பல்லவியின் ரசிகன்: சொல்கிறார் கரண் ஜோஹர்

மும்பை: விராட பர்வம் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. வேணு இயக்கியுள்ள இப்படத்தில் ராணா, பிரியா மணி, நிவேதா பெத்துராஜ், ஈஸ்வரி ராவ்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1990களில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தபோது நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு சுரேஷ் பொப்பிலி இசையமைத்துள்ளார்.விராட பர்வம் படத்தின் ரிலீஸ், கொரோனா காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் ஜூலை 1ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவித்த தேதிக்கு முன்பாகவே வெளியாக இருக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் 17 தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. இந்நிலையில் விராட பர்வம் படத்தின் டிரைலரை தனது டிவிட்டர் பக்கத்தில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர், ‘உங்களின் இந்த லுக் அருமையாக உள்ளது ராணா. படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். டிரைலர் தீவிரமாகவும் வெளிப்படையாகவும் ஆர்வமூட்டும் விதமாகவும் உள்ளது. நீங்கள் அபாரமாக இருக்கிறீர்கள். நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.



Tags : Sai ,Karan Johar , I am a fan of Sai Pallavi: says: Karan Johar
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!