கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: சீனா விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.கடந்த 2010-2014ம் ஆண்டு ஒன்றிய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் உற்பத்தி தொழிற்சாலை பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி பூனம்-ஏ-பாண்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Stories: