13 ஆண்டுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு: ரூ6 ஆயிரம் அபராதம்

மெதினி நகர்:  கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2009ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக ஜார்கண்ட்டுக்கு ஹெலிகாப்டரில் வந்தார். மெதினி நகரில்  உள்ள ஹெலிபேடில் தரையிறங்குவதற்கு பதிலாக விமானி அங்கிருந்த நெல் வயலில் ஹெலிகாப்டரை தரையிறக்கினார். இதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக லாலு மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  ஜார்கண்ட்டின் பாலமு மாவட்டத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ் குமார் முண்டா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரான லாலு பிரசாத் யாதவ், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, நீதிபதி அவருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Stories: