ஆட்டோ கட்டணத்தை உயர்த்தலாம்: தமிழக அரசுக்கு குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் வாடகை ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25க்கு பதிலாக 40 ஆக உயர்த்த வேண்டும் என்றுஆட்டோ கட்டணங்களை திருத்திஅமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக 2013 ஆகஸ்ட் 25ம் தேதி அரசு ஆட்டோ வாடகை கட்டணத்தை நிர்ணயித்தது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் கட்டணம் ரூ.12 என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும் காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ரூ.3.50, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரையிலான பயணங்களுக்கு 50% கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆட்டோ சங்கங்கள், ஆட்டோ வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை வழங்க மாநில போக்குவரத்து துறை ஒரு குழுவை அமைத்தது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மே மாதம் ஆட்டோ ஓட்டுநர்களின் பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை கூட்டங்களை நடத்திய பிறகு, குழு சமீபத்தில் திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதில், வாடகை ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25க்கு பதிலாக 40 ஆக உயர்த்த வேண்டும் என்றும், முதல் 1.8 கிமீ பயணத்திற்குப் பிறகு, ஒரு கி.மீ.க்கான கட்டணத்தை ரூ.12ல் இருந்து ரூ.18 ஆக அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: