திருவல்லிக்கேணியில் கரூர் எஸ்பி கார் விபத்து

சென்னை: வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த சுந்தரவதனம் ஞயிற்று கிழமை கரூர் மாவட்ட எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் கார் காவலர் சுந்தர்ராஜ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஐஓசி சீனியர் மேலாளர் சுனில்குமார் கார் மீது மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தாலும் இரண்டு கார்களும் சேதமடைந்தது. விபத்தின்போது கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் காரில் இல்லை.

Related Stories: