நீர்நிலைகளில் ஆகாய தாமரை படர்வதை நிரந்தரமாக தடுக்க மாநகராட்சி திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்

சென்னை: நீர்நிலைகளில் ஆகாய தாமரை படராதவாறு நிரந்தரமாக தடுக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீர்நிலைகளில் ஆகாயத் தாமரையை மீண்டும் வராதவாறு நிரந்தரமாக தடுக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறதுஆகாயத்தாமரை நீர்நிலைகளில் படர்ந்துள்ளது தொடர்பாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் வடிகால் பணிகளுக்கு குழிகள் தோண்டப்படும்போது புதைவட கேபிள்கள் சேதம் அடையாதவாறு பணிகள் மேற்கொள்ள மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மேயராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியின்படி கூவம் நதியை சீரமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்று முகத்துவாரத்தில் நீர் முழுமையாக செல்லும் வகையில் பொதுப்பணித் துறை சார்பாக அந்த பணிகள் நடைபெற்று வரும் சூழலில் இந்த பணிகளை மாநகராட்சியிடமே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: