கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி: கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முத்துமாரியம்மன், கருப்பசாமி கோயில் கொடை விழா நடந்தது. இதையொட்டி கடந்த 6ம்தேதி காலை 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழு சார்பில் 9ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்லத்துரை திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து காலை 9.30 மணிக்கு அக்கினிசட்டி எடுத்தல், ஊர் விளையாடுதல் ஆகியவை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று (7ம்தேதி) காலை அக்னி சட்டி வளர்த்தல், மதியம் அன்னதானம், இரவு 10 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை தொழிலதிபர் சவுந்தர்ராஜன், தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வெயிலுமுத்துபாண்டியன், தொழிலதிபர் பரத், முத்துப்பாண்டி, ஆறுமுகம், ராஜபாண்டியன், ராமச்சந்திரன், முத்து, மாயக்கண்ணன், சிவசங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

Related Stories: