விருத்தாசலம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்: அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்

விருத்தாசலம்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி விருத்தாசலம் நகராட்சியில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சசிகலா, நகர மன்ற துணை தலைவர் ராணி தண்டபாணி, திமுக மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் முன்னிலை வகித்தனர். திமுக நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து

திருவிக நகர் பகுதியில் தீவிர தூய்மைப் பணியை தொடங்கி வைத்து நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் நகரங்களின் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட பிரதிநிதிகள் ஆட்டோ பாண்டியன், பழனிச்சாமி, நகர பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர் சரவணன், செங்குட்டுவன், தளபதி, குமார், கார்த்திகேயன், நகர்மன்ற கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தங்க அன்பழகன், ராஜ்குமார், வெங்கடேசன், முத்துக்குமரன், தளபதி, சுந்தரி, ஜெயலட்சுமி, உஷா, மணிவண்ணன், கருணாநிதி, ஷகிலா பானு, அன்சார் அலி, தீபா, சேகர், அருள்மணி, வசந்தி, ராசாத்தி, அறிவழகி, கரிமுனிசா, பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: