×

டிஎன்பிஎல் 2022: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!

சென்னை: நடப்பு ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட் 2022-ம் ஆண்டிற்கான போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டி ஜூலை 31-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.

2 ஆண்டுகள் ரசிகர்கள் போட்டிகளை காணமுடியாத வண்ணம் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமாக நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டம் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை, நெல்லை ராயல் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.

இந்நிலையில் நடப்பு சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தங்களது வீரர்களின் பட்டியலை டிஎன்பிஎல் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி தலைமையிலான 22 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது முறையும் தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : TNPL 2022: Release of Super Gillies Players' List
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...