'ரோலெஸ்க்'-க்கு ரோலெஸ்க் வாட்ச் வழங்கிய விக்ரம்!

சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பெரும் எதிர்பார்ப்பிற்கு பின்னர் ஜூன் 03-ம் தேதி  வெளியாகிய விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படம் வெளியான 3 தினங்களில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை முன்னிட்டு படம் வெற்றி பெற்றுள்ளதால் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் ரோலெஸ்க் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யா-வுக்கு ரோலெஸ்க் கைக்கடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார். விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா தோன்றினாலும் அவரது கதாபாத்திரத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது.

ரோலெஸ்க் கைக்கடிகாரத்தை கமல்ஹாசன் பரிசளித்த புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ள சூர்யா, இப்படி ஒரு தருணம் வாழ்க்கையை அழகாக்குகிறது, உங்கள் ரோலெஸ்க்-க்கு நன்றி அண்ணா என பதிவிட்டுள்ளார்.

Related Stories: