×

திருத்தணி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி செய்யவேண்டும்: அரசுக்கு நோயாளிகள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனைகளில் இருக்கை உள்பட அடிப்படை வசதிகள் செய்யவேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி ரயில்  நிலையம் எதிரில் பழைய ஆலமரம் தெருவில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சல், தலைவலி, ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு  நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.

திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கும் ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை  உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன. இதற்காக மாதந்தோறும் கர்ப்பிணி பெண்கள் வந்து சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து செல்கின்றனர். ஆனால் மருத்துவமனையில் போதிய இருக்கை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் நிறைமாத கர்ப்பிணிகள் தரையில் அமர்ந்து  சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருத்தணி அரசு பொது மருத்துவமனையிலும் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது.

பல உயர் சிகிச்சை பிரிவிலும் அரசு  மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்விசிறி கூட இயங்குவதில்லை. கோடை வெயிலில் பெரிதும் நோயாளிகள் பாதிப்படைந்துள்ளனர். கர்ப்பிணிகளும்  பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் நோயாளிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Tiritani Government Hospital ,Government , Rev. Government Hospital, Infrastructure, Government, Patients Request
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...