×

மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் டி.ராஜேந்தர்

சென்னை: மருத்துவ மேல் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்காவுக்கு சென்றார். சில நாட்களுக்கு முன் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கண்டறிந்தனர். மேலும் வயிற்றுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் வந்தது. தொடர்நது அவர் தீவிர சிசிச்சை பிரிவில் இருந்தார். இது குறித்து நடிகர் சிம்பு கூறும்போது, ‘அப்பா நலமாக உள்ளார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் மருத்துவமனையில் இருக்கிறார்’ என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவனைக்கு சென்று டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். அவருடன் மகன்கள் சிம்பு, குறளரசன், மனைவி உஷா ராஜேந்தர், மகள் இலக்கியா ஆகியோரும் சென்றுள்ளனர். நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : America ,Rajentor , Top Treatment, USA, D.Rajender
× RELATED அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி...