×

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..!

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்; பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழி நடத்தி சென்றது பெருமை அளிக்கிறது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றே விளையாடி இருக்கிறேன். கேப்டனாக இருந்தது தன்னை மட்டுமின்றி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியையும் வடிவமைக்க உதவியது. சில திறமையான இளம் வீரர்களின் திறமையான கைகளில் அணி இருப்பதால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதால், எனது விளையாட்டு வாழ்க்கைக்கு திரைச்சீலை அமைக்க இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன்.

இந்த பயணம் தற்போது முடித்திருக்கலாம் ஆனால் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான எனது பங்கை எப்போதும் அளிப்பேன். தன்னை ஊக்குவித்த அனைவருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1999ம் ஆண்டு முதல் இந்திய மகளிர் கிரிக்கட் அணிக்காக விளையாடி வருகிறார் மிதாலி ராஜ். தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட மிதாலி ராஜ் 23 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவில் மிதாலி ராஜ் 7,805 ரன்கள் எடுத்துள்ளார்.

12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 59 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்தார். மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ்.


Tags : Mithali Raj , Indian women's cricket team captain Mithali Raj announces retirement from all forms of cricket ..!
× RELATED தனிமைதான் இனிமை: மித்தாலிராஜ் பேட்டி