×

அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 660 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகை

ராணிப்பேட்டை : அம்மூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு 660 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று 660 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. 75 கிலோ நெல் மூட்டைகளின் விலை விவரம் பின்வருமாறு: ஏடிடி 37 வகை குண்டு நெல் குறைந்த பட்சம் ₹1,118க்கும் மற்றும் அதிகபட்சம் ₹1,250க்கும், கோ 51 வகை நெல் குறைந்தபட்சம் ₹870க்கும் மற்றும் அதிகபட்சம் ₹1,149க்கும், கோ 45 வகை நெல் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் ₹1,149க்கும், ஆர்என்ஆர் வகை நெல் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் ₹1,386க்கும், பூமிகா வகை நெல் குறைந்தபட்சம் ₹1,329க்கும் மற்றும் அதிகபட்சம் ₹1,421க்கும், நர்மதா வகை நெல் குறைந்தபட்சம் ₹1,288க்கும் மற்றும் அதிகபட்சம் ₹1,412க்கும், சுஜாதா வகை நெல் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் ₹1,286க்கும், என்எல்ஆர் வகை நெல் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் ₹1,024க்கும், அன்னம் நெல் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் ₹1,169க்கும், சோனா நெல் வகை குறைந்தபட்சம் ₹1,266க்கும் மற்றும் அதிகபட்சம் ₹1,462க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது நெல் மூட்டைகள் அதிகமாகி உள்ளன. இந்த நெல் மூட்டைகளை அன்றன்றே விற்பனை செய்து விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் நெல் மூட்டைகள் அதிகளவில் எடுத்து வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சன்ன ரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு அதிகபட்சமாக ₹1,462க்கு விற்பனை செய்யப்பட்டது.


Tags : Ammoor , Ranipettai: 660 bundles of paddy were sold at the Ammur Regulatory Auction Hall.
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...