மலர் கண்காட்சி முடிந்த நிலையிலும் ஏற்காட்டிற்கு படையெடுக்கும் மக்கள்

ஏற்காடு : ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்தாவரம் மலர் கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை சுற்றுலாத் தலங்கள், கோயில்களுக்கு அழைத்துசெல்வது அதிகரித்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், சீதோஷ்ன நிலை மாறி  ஏற்காட்டில் சீசன் போல் மாறியுள்ளது. நேற்று காலை முதலே கார், வேன், டூவீலர்கள் மற்றும் பஸ்களில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இதனால் வாரவிடுமுறை, விழாக்காலம் மற்றும் மலர்கண்காட்சி நாட்களை போல சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தும், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.இதனால் இங்குள்ள உணவகங்கள், ரிசார்ட்டுகள் நிரம்பியது. திரும்பிய இடங்கள் எங்கும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

Related Stories: