×

சீ.மலையாண்டிபட்டிணத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட சீ.மலையாண்டி பட்டிணம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் முன்பகுதியில் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது.

இதையடுத்து, சில மாதத்திற்கு முன்பு சுற்றுவரை முழுமையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்த பள்ளி சுற்றுச்சுவர் பணியை விரைந்து துவங்கி நிறைவு செய்வதற்கான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்த பள்ளி சாலையோரம் இருப்பதால் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த வெளிபோன்று காணப்படுவதால், மாணவர்களின் பெற்றோர் அச்சமடைகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், பள்ளி திறப்பதற்குள், சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சீ.மாலையாண்டிபட்டிணத்தில் ஒரே வளாகத்தில் உள்ள துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியானது, ரோட்டோரத்திலேயே அமைந்துள்ளது. ஆனால், இந்த பள்ளியை சுற்றிலும் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மந்தமாகியுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி, இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் விரைந்து அமைக்க சம்பந்தபட்ட துறை அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Rayandipatinam , Pollachi: Panchayat Union Primary School and High School are functioning in the village of C. Malayandi Pattinam in the Southern Panchayat of Pollachi.
× RELATED சீ.மலையாண்டிபட்டிணத்தில் பள்ளியின்...