×

சுற்றுலா பயணிகள் தலைகுந்தா வனத்தில் நுழைவதை தடுக்க கம்பி வேலி அமைப்பு

ஊட்டி :  ஊட்டி அருேகயுள்ள தலைகுந்தா வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லாதவாறு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சம் பகுதிகளுக்கு செல்லவே விரும்புகின்றனர். மேலும், வனங்கள் மற்றும் வனங்களை ஒட்டியுள்ள புல் வெளிகள் அமர்ந்து நேரத்தை போக்குவது மற்றும் உணவு உட்க்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, கேரள மாநிலத்தில் இருந்து வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி வரும் வழியில் தலைகுந்தா சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் அமர்ந்து உணவு உட்க்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இங்கு அமர்ந்து உணவு உட்க்கொள்ளும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக், உணவு கழிவுகள் ஆகியவைகளை வனத்திற்குள்ளோ கொட்டிவிட்டு செல்கின்றனர். ஒரு சிலர் மது பாட்டில்களையும் வீசி செல்கின்றனர். இதனால், இங்குள்ள வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கிறது.

இது போன்று சாலையோரத்தில் உள்ள வனங்களில் அமர்ந்து உணவு உட்க்கொள்வது, பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டுச் செல்லக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்தாலும், அதனை சுற்றுலா பயணிகள் கேட்டபாடில்லை. இந்நிலையில், தலைகுந்தா முதல் பைன் பாரஸ்ட் வரையில் சுமார் ஒரு கி.மீ., தூரத்திற்கு மேல் சாலையோரத்தில் கம்பி வேலிகளை நீலகிரி வனக்கோட்டம் அமைத்துள்ளது. இதன் மூலம், இனி சுற்றுலா பயணிகள் யாரும் வனத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளத. இதனால், இப்பகுதியில் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதை தவிர்க்க முடியும். மேலும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

Tags : Talakunda forest , Ooty: Wire fences have been erected to prevent tourists from entering the Talakunda forest area near Ooty.
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்