விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை-விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகளவு கொட்டித்தீர்த்தது. இதனால், நீர்நிலைகள் முழுவதும் நிரம்பின. இதனால், விவசாயப்பணிகள் இந்த ஆண்டு நல்லமுறையில் நடந்துவருகின்றன. தொடர்ந்து பிப்ரவரி முதல் கோடைவெயில் சுட்டெரிக்கத்தொடங்கியது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில், கடந்த 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருந்தது. இந்த நாட்களில் கோடைமழை அவ்வப்போது பெய்துவந்ததால் வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டைகாட்டிலும் இந்த ஆண்டு சற்று குறைவாகவே இருந்தது.

பகலில் வெயில்அடித்தாலும் இரவு நேரங்களில் கருமேகங்கள் கூடி வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்துவருகின்றது. இதனிடையே, மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரில் கொட்டித்தீர்த்த கனமழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர்சூழ்ந்தது. கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் தண்ணீர்தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி ஊழியர்கள் மோட்டார்மூலம் தண்ணீரை வெளியேற்றினர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழைபெய்ததால் வெப்பத்தில் தவித்திருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மாவட்டம் முழுவதும் 335 மி.மீ மழை பதிவு

விழுப்புரம்         -32 மி.மீ

கோலியனூர்         -30 மி.மீ

வானூர்        -21 மி.மீ

மரக்காணம்         -7 மி.மீ

செஞ்சி         -6 மி.மீ

அனந்தபுரம்         -22 மி.மீ

திருவெண்ணெய்நல்லூர் -17 மி.மீ

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 335 மி.மீ மழையும், சராசரியாக 15.95 மி.மீ பதிவானது.

Related Stories: